பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம்: விரைவில் அரசாணை

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம்: விரைவில் அரசாணை

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளின் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தற்போது பாடவாரியாக உள்ள மொத்த மதிப்பெண்ணை, 200-இல் இருந்து 100-ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதனால் இனிமேல் 1200 மதிப்பெண்களுக்குப் பதிலாக 600 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கப்பட உள்ளது.
10 மதிப்பெண்ணுக்கு பொது அறிவுக் கேள்விகள்: 100 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கு பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மீதியுள்ள 10 மதிப்பெண் பொது அறிவு தொடர்பானது.
நீட் மற்றும் தகுதித் தேர்வில் மாணவ, மாணவிகளின் தகுதித் திறனை அதிகரித்துக் கொள்ள இந்த 10 மதிப்பெண்களுக்கு வெளியில் இருந்து பொது அறிவாக கேட்கப்படும்.
பிளஸ் 1 தேர்விலும் இதே முறை பின்பற்றப்படும். கல்லூரிகளில் 3 ஆண்டுகளில் மதிப்பெண்களைச் சேர்த்து ஒரே சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதே முறை மேல்நிலைப் பள்ளிகளில் பின்பற்றப்படவுள்ளது. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இம்மாற்றங்களுக்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com