வைகோவுடன் தொல். திருமாவளவன் திடீர் சந்திப்பு

புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்கைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்தார்.
வைகோவுடன் தொல். திருமாவளவன் திடீர் சந்திப்பு

புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்கைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ மீது தேசத் விரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் சென்னை பெருநகர 14 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு கடந்த மாதம் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கு வைகோ மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வைகோ, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி வைகோ திடீரென செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்கைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் புழலில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  தமிழக சட்டபேரவை தேர்தல் தற்போது வர வாய்ப்பில்லை. 11-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை தரும். அரசின் புதிய அறிவிப்புகள் கல்லிவத்தரத்தை மேம்படுத்தாது. தமிழக அரசசை மத்திய அரசு தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, சிபிஐ தனித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com