தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கு ரூ.487 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை நீங்கலாக தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கு ரூ.487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாணமைத் துறை அறிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கு ரூ.487 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: சென்னை நீங்கலாக தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கு ரூ.487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாணமைத் துறை அறிவித்துள்ளது.

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி தமிழகத்தில் நிலவி வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் சென்னை நீங்கலாக தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கு ரூ.487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாணமைத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ரூ.487 கோடி நிதியை தமிழக வேளாண்துறை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே இந்த திட்டங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள் தவிர்த்து இதர விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும்.

நெல்,. வாழை உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகளின் மூலமாக இந்த சேவையை பெறலாம். இதன் மூலமாக 23 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com