ரூ.6945 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2017-18-ம் ஆண்டுக்கான ரூ.6945 பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார்.
ரூ.6945 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2017-18-ம் ஆண்டுக்கான ரூ.6945 பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 16-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி உரையோடு தொடங்கியது. 17-ம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 6 நாள்கள் விடுமுறைக்கு பின் 24-ம் தேதி மீண்டும் அவை கூடியது. இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை அவை கூடியதும், பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், அவை முன்னவரான முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவித்தார்.

அதன் பின்னர் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நிகழாண்டு 2017-18-ம் ஆண்டுக்கான மொத்த வரவு செலவு திட்டஒதுக்கீடு ரூ.6945 கோடியாகும். இதில் திட்டம் சாரா செலவுத் தொகை ரூ.4445 கோடியாகும்  திட்டம் சார்ந்த செலவுத் தொகை ரூ.2500 கோடியாகும். 

புதுச்சேரி அரசின் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து வரும் பங்களிப்பு ரூ.4022 கோடியாகும் (57.9 சதவீதம்). இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.1411 கோடியாகும் (20.3 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சாலை நிதி (CRF) மத்திய ஊக்குவிப்பு திட்டத்துக்கு (CSS) ரூ.361 கோடி (5.2 சதவீதம்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள தொகையான ரூ.1151 கோடி (16.5 சதவீதம்) வெளிச்சந்தை மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும். 

மொத்த ஒதுக்கீடான ரூ.6945 கோடியில் ஏறக்குறைய 60 சதவீதம் உறுதி செய்யப்பட்ட செலவினங்களான அதாவது சம்பளங்களுக்காக ரூ.1650.4 கோடி (23.76 சதவீதம்), ஓய்வூதியத்துக்காக ரூ.663.27 கோடி (9.55 சதவீதம்), கடன் சேவைக்காக அதாவது வட்டி மற்றும் கடன் தொகையை திருப்பிச் செலுத்த ரூ.1112.88 கோடி (16.02 சதவீதம்), மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1012.19 கோடி (14.57 சதவீதம்) ஒதுக்கப்பட உள்ளது என பட்ஜெட்டில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com