அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை: பேரவையில் ஆளும் தரப்பினர் - அதிமுக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

அறிவித்த திட்டங்கள் எதையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கூறியதை அடுத்து ஆளும் தரப்புக்கும், அதிமுக தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை: பேரவையில் ஆளும் தரப்பினர் - அதிமுக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

அறிவித்த திட்டங்கள் எதையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கூறியதை அடுத்து ஆளும் தரப்புக்கும், அதிமுக தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் இன்று பேரவையில் நடைபெற்றது.

அப்போது அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் பேசுகையில்: காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் செய்யவில்லை. ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறினார்.

பேரவைத் தலைவர்: இந்த அரசில் எதுவும் நடக்கவில்லை என உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார். முத்தியால்பேட்டை தொகுதியில் மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. மக்கள் போராட்டங்களை நடத்தினர். தற்போது மின்தட்டுப்பாடே அப்பகுதியில் இல்லை.
முதல்வர் நாராயணசாமி: முந்தைய ஆட்சியில் முத்தியால்பேட்டையில் இருந்த மின்தட்டுப்பாடு பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்தோம். அதுவே சாதனை தான்.

இதற்கு அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், கொறடா அனந்தராமன் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினர் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

வையாபுரி மணிகண்டன்: ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், திட்டங்களை வெளிப்படுத்தவுதாக இருக்க வேண்டும். ஆளுநருக்கு திறமையாக உரையை தயார் செய்து அளித்துள்ளனர். ஆளுநர் சமூகவலைதளங்களில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். ஆனால் அவரையே ஆளுநர் உரை மூலம் அரசை பாராட்டச் செய்து விட்டனர். 

இந்த ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. ஆனால் அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை ஏதோ பெரிய சாதனை செய்தது போல் ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளனர். ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை எனக்கூறி கண்டிக்கிறேன்.

பாஸ்கர் (அதிமுக): என்ன செய்யப்போகிறோம், முந்தைய ஆண்டில் என்ன செய்தோம் என்பது குறித்து ஆளுநர் உரையில் காணப்படும். ஆனால் இந்த ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை. அரசுத் தரப்பில் எழுதித்தந்ததை படித்து விட்டு ஆளுநர் சென்றுள்ளார். உரையாற்றி விட்டு சென்ற ஆளுநர் தனது ஜனநாயக மரபை செய்துள்ளேன் எனக்கூறி உள்ளார். ஆளுநரை விமர்சிக்காதீர்கள் என முதல்வர் கூறியுள்ளார். ஆளுநரை அதிமுகவினர முழுமையாக எதிர்த்து வருகிறோம். எம்.எல்.ஏக்கள், அரசை ஆளுநர் விமர்சிக்கலாம். எம்.எல்.ஏக்கள் மக்களை சந்திக்கவில்லை என ஆளுநர் கூறி வருகிறார். ஆளுநர் பதவிக்குரிய மாண்பை அவர் கடைபிடிக்க வேண்டும். 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே இதுவரை நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதி தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. விவசாய வறட்சி நிவாரணம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக முறையான அறிவிப்புகள் இல்லை. பால் உற்பத்திக்கான திட்டம் எதுவும் இல்லை. சர்க்கரை நோயாளிகள் அதிகமாகி வருகின்றனர். அவர்களுக்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். நகரின் மையத்தில் உள்ள முதலியார்பேட்டை தொகுதியி்ல் ஏன் மின்புதை வடப்பணிகளை தொடங்கவில்லை. எனது தொகுதியை புறக்கணிக்கிறீர்களா. திட்டமதிப்பீடு செய்தும் ஏன் பணிகளை துவங்கவில்லை. அரசின் ரப்பர் ஸ்டாம்ப் போல் ஆளுநர் உரை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com