புதுவை: ரூ. 6,945 கோடிக்கான பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2017-18 ஆம் ஆண்டுக்கான ரூ. 6,945 கோடி பட்ஜெட்டை முதல்வர் வி.நாராயணசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிகழாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் வி.நாராயணசாமி.
புதுச்சேரி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிகழாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் வி.நாராயணசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2017-18 ஆம் ஆண்டுக்கான ரூ. 6,945 கோடி பட்ஜெட்டை முதல்வர் வி.நாராயணசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 16-ஆம் தேதி ஆளுநர் கிரண் பேடி உரையுடன் தொடங்கியது. 17-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான சட்ட வரைவு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், 6 நாள்கள் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை மீண்டும் பேரவை கூடியது. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை முதல்வர் வி.நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிகழாண்டுக்கான (2017-18) மொத்த வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு ரூ. 6,945 கோடியாகும். இதில், திட்டம் சாரா செலவுத் தொகை ரூ. 4,445 கோடியாகும். திட்டம் சார்ந்த செலவுத் தொகை ரூ. 2,500 கோடியாகும்.
புதுச்சேரி அரசின் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து வரும் பங்களிப்பு ரூ. 4,022 கோடி. (57.9 சதவீதம்). இதில், மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1,411 கோடி (20.3 சதவீதம்) என மதிப்பிடப்பட்டது.
மத்திய சாலை நிதி (இதஊ), மத்திய ஊக்குவிப்புத் திட்டத்துக்கு (இநந) ரூ. 361 கோடி (5.2 சதவீதம்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள தொகையான ரூ. 1,151 கோடி (16.5 சதவீதம்) வெளிச் சந்தை மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும்.
மொத்த ஒதுக்கீடான ரூ. 6,945 கோடியில் ஏறக்குறைய 60 சதவீதம் உறுதி செய்யப்பட்ட செலவினங்களான சம்பளத்துக்கு ரூ. 1,650.4 கோடியும் (23.76 சதவீதம்), ஓய்வூதியத்துக்காக ரூ. 663.27 கோடியும் (9.55 சதவீதம்), கடன் சேவைக்காக (வட்டி மற்றும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த) ரூ. 1,112.88 கோடியும் (16.02 சதவீதம்), மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ரூ. 1,012.19 கோடியும் (14.57 சதவீதம்) ஒதுக்கப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com