குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி தொடக்கம்

உதகை சிசனில் கடைசி நாளாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த பழக்கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் தொடங்கி வைத்தார்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: உதகை சிசனில் கடைசி நாளாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த பழக்கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் தொடங்கி வைத்தார்.

பூங்கா நுழைவாயிலில் 12 அடி உயரத்தில் பலாப்பழம், முலாம் பழம் வாழை உள்ளிட்ட 12 வகையான பழங்களைக் கொண்டு அலங்கரிப்பட்டது. நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத்துறை சார்பில் 200 கிலோ எடையில் ஆரஞ்சு, சாத்துக்குடி பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்களாலும், 6 அடி உயரத்திலும் 20 அகலத்திலும் வாடிவாசல் முன் வீரர் ஒருவர் ஏர் தொழும் உருவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருநெல்வேலி தோட்டக் கலைத்துறை சார்பில் மாதுளை பழங்களால் செவ்வாடும், கடலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை சார்பில் அண்ணாச்சி, தர்பூசனி உள்ளிட்ட 6 வகை பழங்களை கொண்டு மெட்ராஸ் செம்மறி ஆடும்,

திண்டுக்கல் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆரஞ்சு பழங்களால் எருது உருவமும், கோவை மாவட்ட தோட்டக் கலைத்துறை சார்பில் பலா, திரட்ரை கொண்டு குரும்பை ஆடு, தர்மபுரி தோட்டக் கலைத்துறை சார்பில்  சப்போடா பழங்களால் வரை ஆடு உருவமும்,

மதுரை தோட்டக் கலைத்துறை சார்பில் முலாம் பழங்களால் ராஜபாளையம் நாய் உருவமும்,  தேனி மாவட்ட தோட்டக் கலைத்துறை சார்பில் திரட்டை பழங்களால் கன்னி ஆடு உருவமும், கிருஷ்ணகிரி தோட்டக் கலைத்துறை சார்பில் மாம்பழம் காட்டெருமை உருவமும்,

சேலம் மாவட்டம் தோட்டக் கலைத்துறை சார்பில் திராட்சைகளால் காளை உருவமும், கன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைத்துறை சார்பில் ஆரஞ்சு கொடி ஆடு உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் பார்வையாளர் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை பரிசு போட்டி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com