நாளை நிறைவு பெறுகிறது கத்திரி வெயில்

கோடைக்காலத்தின் உச்சமாகக் கருதப்படும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 28) நிறைவடைகிறது.

கோடைக்காலத்தின் உச்சமாகக் கருதப்படும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 28) நிறைவடைகிறது.


இந்த ஆண்டு கோடையில் கத்திரி வெயில் காலம் கடந்த மே 4-இல் தொடங்கியது. மே 28-இல் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நாள்தோறும் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் கரூர் மாவட்டம் பரமத்தி ஆகிய இரண்டு இடங்களில் மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வந்தன. திருத்தணியில் மே 16 ஆம் தேதி தமிழகத்தில் முதன்முறையாக 114 டிகிரி வெயில் பதிவானது. இந்த நாளே கோடைக் காலத்தின் மிக வெப்பமான நாளாகும். இந்தக் காலத்தில் அனல் காற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 28) கத்திரி வெயில் காலம் நிறைவடைகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com