ரஜினி அரசியலுக்கு வருவார்... ஆனா வரமாட்டார்: சகோதரரின் மறுப்பு

நடிகரி ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக, அவரது அண்ணன் சத்யநாராயணா கூறியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவார்... ஆனா வரமாட்டார்: சகோதரரின் மறுப்பு

பெங்களூரு: நடிகரி ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க இருப்பதாக, அவரது அண்ணன் சத்யநாராயணா கூறியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

தனியார் செய்தித் தொலைக்காட்சி சத்யா நாராயணாவை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதில், இந்த விஷயம் தெரிய வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஜூன் மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பெங்களூருவில் தான் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், தான் அவ்வாறு கூறுவில்லை. ரஜினி, தனது ரசிகர்களுடன் 2 மற்றும் 3வது கட்ட சந்திப்புகளை நடத்தி, கருத்துக் கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கவிருக்கிறார்.

அதில்லாமல், அடுத்தடுத்து திரைப்பட வேலைகளும் இருக்கிறது. எனவே, அரசியல் கட்சி குறித்து அவரால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. 

நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் சத்ய நாராயணா கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய நாராயணா, அரசியலில் ஊழலை அகற்றிடவே ரஜினிகாந்த் களமிறங்குவதாகவும், ஜூலை மாத இறுதியில் தனிக் கட்சி குறித்து ரஜினி அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.

மேலும்,"ரஜினிகாந்த் அரசியலில் நுழைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அரசியலில் நுழைவது குறித்து அவரது தீவிர ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டுள்ளார். அனைவருமே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர்" என்றும்,

தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கும் முன்பு, தனது ரசிகர்கள் அனைவரையும் அவர் சந்திக்க விரும்பினார். அதனால்தான் சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசினார். அரசியலில் இனி ஒரு புதிய சகாப்தம் ஆரம்பம் என்றும் அவர் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com