மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக பொதுமக்களை திரட்டிப் போராட்டம்: டி.ராஜா

மாட்டிறைச்சித் தடை உத்தரவுக்கு எதிராகப் பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.
மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக பொதுமக்களை திரட்டிப் போராட்டம்: டி.ராஜா

மாட்டிறைச்சித் தடை உத்தரவுக்கு எதிராகப் பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான முதல் மாநில மாநாடு சென்னை வியாசார்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா பேசியதாவது:
தற்போது பா.ஜ.க ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். இதற்காக மோடியும், அமித்ஷாவும் நாடு முழுவதும் சுற்றி வருகின்றனர். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள் என்பது கேள்விக்குறிதான். ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை அளிப்போம், வேளாண்மை, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. இந்த ஆட்சியில் தலித்துகள், சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. அதிலும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது என்பது கண்டனத்துக்குரியது.
தற்போதைய நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், மாட்டிறைச்சியைக் காரணமாகக் கூறி தலித்துகள், முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர். மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தகுதியுள்ளதா என்பதே கேள்விக்குறிதான். இதன் மூலம் தனி மனித உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்றார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணு தலைமை வகித்து பேசியவது: சாதிய பாகுபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுவோர் தலித் மக்கள்தான். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பசு பாதுகாப்பு என்கிற பேரில் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்கிற மத்திய அரசின் உத்தரவை வன்மையாக கண்டிப்பதாகக் கூறினார்.
கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் பொ.லிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com