பாம்பன், கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மோரா என்ற பெயர் வைக்கப்பட்ட புயல் மேற்கு வங்கப் பகுதியில் மையம் கொண்டிருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை 2-ஆம் எண் புயல்
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. கடலூர் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. புதுச்சேரி பழைய துறைமுகத்தில் திங்கள்கிழமை ஏற
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. கடலூர் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. புதுச்சேரி பழைய துறைமுகத்தில் திங்கள்கிழமை ஏற

மோரா என்ற பெயர் வைக்கப்பட்ட புயல் மேற்கு வங்கப் பகுதியில் மையம் கொண்டிருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுக்குத் தெற்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து, புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர அறிவிப்பாக புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த "மோரா' புயல் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கொல்கத்தாவுக்கு 660 கி.மீ. தெற்கு, தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது. இது மேலும் வழவடைந்து செவ்வாய்க்கிழமை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, இந்தத் துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு, தூர எச்சரிக்கை கொடியாக 2-ஆம் எண்ணாக மாற்றப்பட்டது.
ராமேசுவரத்தில்...: ராமேசுவரம் பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை, காரைக்காலில்...: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. இந்தப் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இருப்பினும், திங்கள்கிழமை பகல் நேரத்தில் நாகை, காரைக்கால் மாவட்டங்களில் வெயில் வானிலையே நீடித்தது. குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்கள் ஏதும் இல்லை.
கடலூரில்...: வங்கக் கடலில் "மோரா' புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. இந்தப் புயலால் கடலூர் மாவட்டம் மழைப் பொழிவை பெறுவதற்கான வாய்ப்பில்லை என கடலூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில்...: "மோரா' புயல் எச்சரிக்கையையடுத்து, புதுச்சேரி பழைய துறைமுகத்திலும் திங்கள்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com