தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: அடுத்த 3 நாள்களில் தமிழகத்திலும் மழை

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக பொழியும் காலத்தைவிட இரண்டு நாள்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக பொழியும் காலத்தைவிட இரண்டு நாள்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழையானது கேரளத்தில் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு இந்தப் பருவமழையானது சற்று தாமதமாக ஜூன் 8-ஆம் தேதியன்று தொடங்கியது.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாக செவ்வாய்க்கிழமையே (மே 30) தொடங்கியது. கேரளத்தின் கண்ணனூர், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
கேரளம் மட்டுமன்றி நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை பெய்தது. வங்கதேசத்தில் மோரா புயல் செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்ததன் காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தாலேயே தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கமாக கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஓரிரு தினங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதால் கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில்...: இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினாôó. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்கியது.
அந்த மாநிலத்தின் அநேக இடங்களில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. மோரா புயல் செவ்வாய்க்கிழமை (மே 30) காலை 6.30 மணியளவில் வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com