மோடி விரும்புவதைதான் மக்கள் சாப்பிட வேண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

பிரமதர் நரேந்திர மோடி விரும்புவதைதான் மக்கள் சாப்பிட வேண்டுமா என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி
மோடி விரும்புவதைதான் மக்கள் சாப்பிட வேண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை: பிரமதர் நரேந்திர மோடி விரும்புவதைதான் மக்கள் சாப்பிட வேண்டுமா என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இதனை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழகம் மெளனம் காத்து வருகிறது. மேலும், இந்த சட்டத்தை படித்துப் பார்த்து பதில் சொல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

கருணாநிதியின் வைர விழா காரணமாக தமிழகம் முழுவதும் அல்லாமல் சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தப்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சிக்கான தடையை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற ஸ்டாலின், பிரமதர் நரேந்திர மோடி விரும்புவதைதான் மக்கள் சாப்பிட வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்தில், கனிமொழி, சுப.வீரபாண்டியன், 10 திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com