வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 9,500 வெளிநாட்டுப் பறவைகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சுமார் 9,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 9,500 வெளிநாட்டுப் பறவைகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சுமார் 9,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. 
நம் நாட்டின் முக்கிய பறவைகள் புகலிடங்களில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முக்கியமானதாகும். இங்குள்ள ஏரி 75 ஏக்கர் பரப்பளவிலானது.
ஏரியின் உள்பகுதியில் கடம்ப, வேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், இம்மரங்களின் மேற்பகுதியில் கூடு கட்டி, முட்டைகள் இட்டு குஞ்சு பொறித்து இனப் பெருக்கம் செய்தும், தங்கி ஓய்வெடுக்கவும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வருகின்றன. 
இங்குள்ள பறவைகளுக்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பருவ காலமாகும். வேடந்தாங்கலுக்கு பாம்புத்தாரா, கரண்டிவாயன், அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகளும், ஊசிவால் வாத்து, நீலச்சிறகி வாத்து, தட்டவாயன், பவளக்காலி, பட்டாணி உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. வேடங்தாங்கல் சரணாலயம் இந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. 
தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஏரி நிரம்பி வழிகிறது. 
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை அறியவும், செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் வனத் துறை சரக அலுவலர் சுப்பையா வியாழக்கிழமை ஆய்வு செய்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சுற்றுலாப் பயணிகளுக்காக சரணாலயம் திறக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகின்றன. 
தற்போதைய நிலவரப்படி சுமார் 9,500 வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து குவிந்துள்ளன. இவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளும், பறவைகளைக் காணும் வகையில் தொலைநோக்கி வசதி போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com