தனியார் காகித ஆலையில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம், கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையில் வருமான வரித் துறையினர் 16 மணி நேரம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம், கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையில் வருமான வரித் துறையினர் 16 மணி நேரம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் செந்தில் பேப்பர் அன்ட் போர்டு எனும் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக மணல் வியாபாரி ஓ.ஆறுமுகசாமியும், அவரது மகன் செந்தில் இயக்குநராகவும் உள்ளனர். இங்கு 300 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையை தினகரன், சசிகலா தரப்பு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோவையில் இருந்து வருமான வரித் துறையினர் 6 பேர் காரில் ஆலைக்கு வந்தனர். அங்கு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, போலீஸார் ஆலைக்குள் வெளிநபர்களை அனுமதிக்கவில்லை. சோதனையில் ஆலையின் பிற கிளைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com