விஐடியில் பி.டெக். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக தொடக்க விழா வேலூர் தலைமை தபால் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விஐடியில் பி.டெக். நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்த வேந்தர் ஜி.விசுவநாதன்.
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விஐடியில் பி.டெக். நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி வைத்த வேந்தர் ஜி.விசுவநாதன்.

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக தொடக்க விழா வேலூர் தலைமை தபால் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் விஐடி பல்கலைக்கழகங்களில் உள்ள பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். 
விஐடி துணைத் தலைவர்கள் சங்கர், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், வேலூர் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் கே.விஜயா, தலைமை போஸ்ட் மாஸ்டர் என்.கோவிந்தராஜ், உதவிக் கண்காணிப்பாளர்கள் என்.முரளி, மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஐடி வேலூர், சென்னை, ஆந்திரம், போபால் ஆகிய வளாகங்களில் உள்ள பி.டெக். பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 முதல் 15-ஆம் தேதி வரை இணையவழி (ஆன்லைன்) நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், துபை, குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. 
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வேலூர் உள்பட நாட்டில் உள்ள 30 முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,200 செலுத்தியும், விஐடி பல்கலைக்கழகம் என்ற பெயரில் ரூ. 1,200-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.vit.ac.in  என்ற இணையதளம் மூலம் ரூ. 1,150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 28-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுதொடர்பான விவரங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com