தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம்  அனுமதி! 

தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்து தீர்ப்பு வழக்கியுள்ளது.
தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம்  அனுமதி! 

புதுதில்லி: தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், தமது முந்தைய தீர்ப்பினில் சில திருத்தங்களை மேற்கொண்டது.

அதன்படி, 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளைப் பொருத்தவரை, அவற்றிலிருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மதுக்கடைகளை மூடுவதைத் தவிர்ப்பதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகள் என்ற பட்டியலின் கீழ் வகைப்படுத்தும் முயற்சியில் தமிழகம் பெரும்பாலான மாநில அரசுகள் ஈடுபட்டன. இந்த முயற்சிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் தமிழக அரசு தொடர்பான வழக்கு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு அனுமதி அளித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் இது தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்கள் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட  ஆட்சித் தலைவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகளைக் திறப்பது தொடர்பாக பொது மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் தமிழக அரசுக்கு இந்த தீர்ப்பு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com