உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-இல் தீர்ப்பு! 

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-இல் தீர்ப்பு! 

திருப்பூர்: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவரும், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதனை பிடிக்காத கௌசல்யாவின் பெற்றோர் ஏற்பாடு செய்த கூலிப்படையின் மூலம் கடந்த 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலையில் சங்கர் கோரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தையடுத்து,  இந்த வழக்கில் தொடர்புடையதாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வழக்கில் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com