"மது விருந்து கொண்டாட்டங்களுக்குத் தடை'

மது விருந்து கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மது விருந்து கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: குடி போதையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் மோதியதில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஒரு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழக்க, 5 ஓட்டுநர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
 சென்னையில் இப்போது வார இறுதி கொண்டாட்டங்கள் என்ற புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. சனிக்கிழமை இரவுகளில் நட்சத்திர விடுதிகளில் மது அருந்துவதும், பின்னர் அதே போதையில் வாகனங்களை ஓட்டி சாலையோரம் வசிக்கும் மக்கள் மீதும், ஆட்டோக்கள் மீதும் மோதி உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை நடைபெறுகிறது.
 சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மது விருந்து கொண்டாட்டங்களைத் தடை செய்ய வேண்டும். கல்லூரி மாணவர் குடிபோதையில் ஓட்டிய மகிழுந்து மோதி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதை அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்திடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com