ஆலய தரிசன கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

ஆலய தரிசன கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆலய தரிசன கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது:
கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான பொதுநல வழக்கின் தீர்ப்பில், 'பக்தர்கள் இடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது என்ற வகையில், அனைவரும் கருவறையில் இருந்து ஒரே தூரத்தில் கடவுளை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது.
கோயில்களில் தரிசனத்துக்காக எந்த வகையிலும் கட்டணம் வாங்கக் கூடாது என்பது என்பதை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை இந்து முன்னணி நடத்தி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பில் தரிசனக் கட்டணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படாதது வருத்தமளிக்கிறது. 
கடவுள் காட்சிப் பொருள் அல்ல. கடவுளின் முன்பு அனைவரும் சமம். எனவே ஒட்டு மொத்தமாக ஆலய தரிசன கட்டண முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, தரிசனக் கட்டண முறைகளை விலக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com