கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா குறைந்த வட்டியில் நிதியுதவி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

ஆஸ்திரேலிய நாட்டில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த அந்நாடு குறைந்த வட்டியில் நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக தமிழக

ஆஸ்திரேலிய நாட்டில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த அந்நாடு குறைந்த வட்டியில் நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை ஆய்வு செய்திட 5 நாள்கள் பயணமாக அமைச்சர் எஸ்.பி.வேலுணி மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர். இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா, மெல்பர்ன் மாகாணங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குடிநீர் திட்ட தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டின் விக்டோரியா மாகாண நிதியமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, தமிழகத்தில் இத்திட்டங்களை செயல்படுத்த 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் என குறைந்த வட்டியில் நிதியுதவி அளிக்க தயாராக உள்ளதாக அவர் உறுதியளித்தார். மெல்பர்ன் மாகாணத்தில் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் நேரில் பார்வையிட்டோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com