காய்கறி விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

கனமழை காரணமாக உயர்ந்து வரும் காய்கறி விலையைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு
காய்கறி விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

கனமழை காரணமாக உயர்ந்து வரும் காய்கறி விலையைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பு அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதியில் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை நேதாஜி நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் மழைநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்கி அடைப்பு ஏற்படுகிறது.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை வீதியில் தூக்கி எறியாமல் உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும். மழை நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 
கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செயலாற்றி வருகின்றனர். மேலும் கனமழையால் தொற்று நோய் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கனமழை தொடர்வதால் சென்னையில் காய்கறி விலை அதிகரித்து வருவதாக எழுந்துள்ள புகார்களையடுத்து விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த கர்நாடகா மாநிலத்திலிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை காய்கறிக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் ராஜு.
அப்போது முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com