தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படை துப்பாக்கி சூடு குறித்து விசாரணை வேண்டும்: தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். 

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கை:

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலில், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் துப்பாக்கி சூட்டின் காயங்களோடும், துப்பாக்கி குண்டு சாட்சியங்களோடும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக காவல்துறையின் கடலோர காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட துப்பாக்கி சூடும் ஏதும் நடத்தப்படவில்லை என்று கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு துறையின் (இஆஐ) குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வாழ்வாதாரத்திற்கு கடலில் மீன் பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருந்தால் அது மனித உரிமை மீறல் செயலாகும். எனவே தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இத்தகைய மூன்று வெவ்வேறு துறைகளின் விசாரணை மூலம் தான் உண்மைகள் கண்டறிந்து தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர இயலும்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் இந்த விசாரணை வழி வகுக்கும் என்றார் இளங்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com