புதுவைக்காக 20 முறைக்கு மேல் நிதி கேட்டும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுவை மாநில வளர்ச்சிக்காக 20 முறைக்கு மேல் நிதி கேட்டும், அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவில் பேசுகிறார் முதல்வர் நாராயணசாமி. 
புதுவை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவில் பேசுகிறார் முதல்வர் நாராயணசாமி. 

புதுவை மாநில வளர்ச்சிக்காக 20 முறைக்கு மேல் நிதி கேட்டும், அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில தலைமை அலுவலகத்தில் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
நேருவின் உருப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
மத்திய அரசின் தவறான நிர்வாக நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே பாரபட்சம் காட்டி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 20 முறைக்கும் மேல் மத்திய அரசை அணுகி, புதுவை மாநிலத்துக்கு நிதி கேட்டும் அதற்கு செவிசாய்க்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சி, நிர்வாகத்தை ஆளுநர்களைக் கொண்டு முடக்க நினைக்கிறது மத்திய அரசு.
மேலும், சிபிஐ மற்றும் வருமான வரித் துறையை கொண்டும் எதிர்க்ககட்சிகளை முடக்க நினைக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது.
பணிமாற்றத்தின் மூலம் வெவ்வேறு துறைகளில் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருவது குறித்து விசாரிக்க வேண்டுமென மாநில ஆளுநர் கூறியுள்ளார். முதலில் ஆளுநர் மாளிகையில் வேறு துறைகளைச் சேர்ந்த 64 பேர் பணிபுரிவது குறித்து அவர் விளக்கட்டும். நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் மூலம் மாநில அரசை பணிய வைக்க முடியாது என்றார் நாராயணசாமி.
விழாவில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com