புதுவையில் 14 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் 14 இடங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
புதுவையில் 14 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் 14 இடங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். 

புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் தீயணைப்பு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும், தீயணைப்பு ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும்.

தீயணைப்புத்துறைக்கு இயக்குனர் பதவியை உருவாக்க வேண்டும், ஓவர்டைம் அலவன்சை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தீயணைப்பு துறைக்கு புதிய வாகனங்களை வாங்க வேண்டும்.

தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு கவசம் மற்றும் கருவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீயணைப்பு வீரர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள 14 தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக தீயணைப்பு பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். அலுவலக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

அப்படியும் தீர்வு கிடைக்கவில்லை  என்றால் வரும் டிசம்பர் 1}ம் தேதி முதல் தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

போராட்டத்துக்கு தீயணைப்பு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 14 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலேயே உள்ளிருப்பு போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com