மதுக்கடைகளை கூடுதலாகத் திறக்கக் கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கூடுதலாகக் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கூடுதலாகக் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் விதத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளின் வழியாகச் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிகளின் சாலைகளாக வகைமாற்றம் செய்து, மீண்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முயற்சிப்பது சமூகத் தீமையாகும். பூரண மதுவிலக்கு என்று அளித்த தேர்தல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. உடனடியாக இந்த முடிவைக் கைவிட வேண்டும்.
ராமதாஸ் (பாமக): தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர்ப் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும், அப்பகுதிகளில் மதுக்கடைகளைத் தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தீர்ப்பு சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பூரண மதுவிலக்குக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நேரமாக இது உள்ளது.
ஜி.கே.வாசன் (தமாகா): நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர்ப் பகுதிகளுக்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் இனி ஒரு கடைகூட கூடுதலாகத் திறக்கக் கூடாது. பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com