புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை: புதிய அமைப்பு தொடக்கம்

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் இலவசமாக மருந்து சிகிச்சை ('கீமோதெரப்பி') அளிக்க 'ஆற்றல்' என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பல்கலைக்கழக வேந்தர் வீரைய்யன், சவீதா மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் சவீதா, ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசியத் தலைவர் கிறிஸ்டோபர் அரவிந்த்,
தொடக்க விழாவில் பல்கலைக்கழக வேந்தர் வீரைய்யன், சவீதா மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் சவீதா, ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசியத் தலைவர் கிறிஸ்டோபர் அரவிந்த்,

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் இலவசமாக மருந்து சிகிச்சை ('கீமோதெரப்பி') அளிக்க 'ஆற்றல்' என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி, சென்னை நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 ஆகியவை இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் வீரைய்யன் தலைமை வகித்தார். ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசியத் தலைவர் கிறிஸ்டோபர் அரவிந்த், சவீதா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் சவீதா முன்னிலை வகித்தனர். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா கலந்து கொண்டு 'ஆற்றல்' அமைப்பைத் தொடக்கி வைத்தனர். 
விழிப்புணர்வு அவசியம்: விழாவில், நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், 'வாழ்வியல் மாற்றம், உணவுப் பழக்கம், மரபணு ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது. இளைய தலைமுறையினர் மது, புகைப்பழக்கத்துக்கு அடிமையாகக்கூடாது. அதிக அளவிலான பெண்கள் மார்ப்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்குப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்' என்றார்.
முன் எச்சரிக்கை தேவை: டாக்டர் சாந்தா பேசும்போது, 'நமது நாட்டில் புற்றுநோய் தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது. முன் எச்சரிக்கையாக இருந்தால் பல புற்றுநோய்கள் தடுக்கக் கூடியவைதான். 60 சதவீத புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்' என்றார்.
இலவச கிகிச்சை: டாக்டர் வீரைய்யன் பேசுகையில், 'புற்றுநோய்க்காக தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு, அதன் தொடர் சிகிச்சையாக 'ஆற்றல்' அமைப்பின் மூலம் 4 முதல் 6 வரையிலான கதிர்வீச்சு சிகிச்சையும், உணவும், தங்கும் விடுதியும் இலவசமாக வழங்கப்படும்' என்றார் அவர்.
இந்த விழாவில், ஆற்றல் அமைப்பின் தூதர்களான நடிகர் பிரசாந்த், நடிகை சிநேகா, சென்னை நைட்ஸ் ரவுண்ட் டேபிள் 181 அமைப்பின் தேசியச் செயலாளர் பியூஷ் தாகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com