ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் 8 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இதுவரை 8 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வரும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இதுவரை 8 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வரும் 22-ஆம் தேதி கடைசியாகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையம், கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அன்றிலிருந்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் நிலைமை குறித்தும், அவர் துரதிருஷ்டவசமாக இறந்த நாளான டிசம்பர் 5-ஆம் தேதி வரை, அவருக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்தும் இந்த ஆணையம் விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிரமாணப் பத்திரங்கள்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தனிப்பட்டமுறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்பு உடையவர்களும், அதுகுறித்து அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை சத்தியப் பிரமாண உறுதிமொழிப் பத்திர வடிவில் அனுப்ப வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பிரமாணப் பத்திரங்களை நவம்பர் 22-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார்.
இதுவரை எத்தனை பேர்?: இதுவரையில் மொத்தம் 8 பேர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய 70-க்கும் மேற்பட்ட கடிதங்கள் விசாரணை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்து அவர்களிடமும் விவரங்கள் கோரப்பட்டு வருவதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவக் குழு: மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவ ரீதியான குழுவும் விசாரணை ஆணையத்துக்கு உதவி செய்ய உள்ளது. இதற்காக தனியான மருத்துவக் குழுவை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் 22-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அதன் பிறகு ஆவணங்கள் அடிப்படையிலும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்தும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com