தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை நடுவில் சில நாட்களுக்கு இடைவெளி விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரும் தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தினை நிர்வகிப்பவருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது:

கிழக்குதிசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகம், கடற்கரைப்பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று நம்மால் கணிக்க முடியாது. எனவே வரும் வாரத்தில் வெளியே செல்லும் போது 'குடை' அல்லது 'ரெயின்கோட்' உடன் எடுத்துச் செல்லவும்.

கடந்த வாரத்துக்கு முன் பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த வாரம் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த முறை டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் வரும்வாரம் மழை பெய்யும்.

அதேபோல தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அடுத்த வாரத்தில் மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்யும்.வடகடலோர மாவட்டங்களாகன சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை இருக்கும்.

மிதமான மழை மட்டுமே இருக்குமே என்பதால், வெள்ளத்துக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை. இந்த மழை என்பது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்யாது. வெள்ளம் வரும் அளவுக்கும் மழை பெய்யப் போவதில்லை. எனவே மழையை அனுபவியுங்கள்.

இவ்வாறு அவரது முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com