கரும்பு நிலுவைத் தொகை: நவம்பர் 26-இல் பேச்சுவார்த்தை

கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பாக, வருகிற 26-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கரும்பு நிலுவைத் தொகை: நவம்பர் 26-இல் பேச்சுவார்த்தை

கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பாக, வருகிற 26-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
 கடலூர் மாவட்டத்தில் 3 தனியார் சர்க்கரை ஆலைகள், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசின் பரிந்துரை விலையை ஆலை நிர்வாகத்தினர் வழங்கவில்லையாம். இதனால், சுமார் ரூ.600 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளதாகக் கூறப்படுகிறது.
 எனவே, நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையில், தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக நிலுவைத் தொகையில் ஒரு பகுதி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். எனினும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நிலுவைத் தொகையை பெற முடியவில்லை.
 கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:
 கடலூர் மாவட்டத்திலுள்ள எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.216 கோடியை அளிக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் கிடைக்கப்பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
 அதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கித் தொகையை வழங்குவது தொடர்பாக நவ.26-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், நல்ல தீர்வு எட்டப்பட்டு, விவசாயிகளுக்கு பாக்கித் தொகை கிடைக்கப்பெறும் என்றார் அவர்.
 அமைச்சரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பெ.ரவீந்திரன் வரவேற்றுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com