தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.
 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கட்சியின் மாவட்ட 9ஆவது மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:
 கட்சியின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 ஆகிய 2 நாள்கள் தூத்துக்குடியிலும், அகில இந்திய 22ஆவது மாநாடு ஹைதராபாதில் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன.
 தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெüனம் காப்பது ஏன்? அது சட்ட விரோத மணல் என்றால் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
 தமிழகத்தில் தரமான கல்வி இல்லை. அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஆளுநரின் ஆய்வு என்பது இந்திய அரசியல் சட்டத்தை அத்துமீறும் செயல். சட்டம் என்ன உரிமை அளித்துள்ளதோ, அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். சட்ட உரிமை மீறலைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
 தமிழகம், புதுச்சேரியில் ஆளுநரை வைத்து ஆய்வு செய்யும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ஏன் செய்யவில்லை?
 சிறந்த முதல்வர்கள் இருந்த மாநிலம் தமிழகம். இப்போது அதன் பெருமை தாழ்ந்து வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com