மூன்று மாநில எல்லைகளில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை

கூடலூரை அடுத்துள்ள மூன்று மாநில எல்லைகளில் தமிழக நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்துப் பணி, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று மாநில எல்லைகளில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை

கூடலூரை அடுத்துள்ள மூன்று மாநில எல்லைகளில் தமிழக நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்துப் பணி, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா உத்தரவின்பேரில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார்கூடலூர் வருவாய்க் கோட்டத்தைச் சுற்றியுள்ள கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட வன எல்லைகளான பாட்டவயல், அம்பலமூலா, முள்ளன்வயல், நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, மலப்புரம் மாவட்ட வன எல்லைகளான கிளன்ராக், முண்டேரி, கீழ் நாடுகாணி, ஓவேலி, கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா, முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனங்கள் இணையும் பகுதி, தமிழகம், கேரளம், கர்நாடக வனங்கள் இணையும் டிரைஜங்ஷன் பகுதி, வனப் பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களிலும் அதிரடியாக ரோந்து சென்று பழங்குடி மக்களிடம் தகவல்களைச் சேகரித்தனர்.
 இப்பணியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து வன எல்லைகளில் ரோந்து சென்றனர். கூடலூர் ஓவேலி வனப்பகுதியை ஒட்டிய கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்ட வழக்கடவு வனப் பகுதியிலுள்ள படகா வனத்தில் மத்திய அதிரடிப் படையினர் கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியதில் முக்கிய நக்ஸல் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 இதேபோல, வயநாடு மாவட்டத்தின் வெள்ளமுண்டா வனப் பகுதியில் கேரள அதிரடிப் படையினருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் பலமுறை மோதல் நடைபெற்றுள்ளது.
 முக்கியத் தலைவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு, நக்ஸல்கள் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில் மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தலைமையில் தமிழக எல்லையில் போலீஸார் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
 முதல்கட்டமாக காவல் நிலையங்களில் நுழைந்து தாக்குதல் நடந்தால் முறியடிப்பது குறித்த ஒத்திகை கேரள மாநில எல்லையில் உள்ள அம்பலமூலா காவல் நிலையத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த வாரம் வனப் பகுதிகள், வன எல்லைகளில் அதிரடியாக ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com