ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய விசாரணை: இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையினைத் துவங்கியுள்ள ஒரு நபர் ஆணையம்,   இரு அரசு மருத்துவர்களுக்கு  நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய விசாரணை: இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன்!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையினைத் துவங்கியுள்ள ஒரு நபர் ஆணையம்,   இரு அரசு மருத்துவர்களுக்கு  நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம், சென்னை எழிலகக் கட்டடத்தின் கலசமஹாலில் , இன்று முறைப்படி தனது விசாரணையைத் தொடங்கியது.

ஆணையத்தின் விசாரணை தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு இரு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஆஜராகி பிரமாணப் பாத்திரங்களை தாக்கல் செய்யலாம்.

மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

உண்மையை முழுமையாக வெளிக்கொணர்வதே ஆணையத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com