இரட்டை இலைச் சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் கேவியட் மனு தாக்கல்

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக உத்தரவிடும் முன் எங்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கோரி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரட்டை இலைச் சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் கேவியட் மனு தாக்கல்


புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக உத்தரவிடும் முன் எங்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கோரி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக கட்சிச் சின்னம், பெயர் அனைத்தையும் முதல்வர் பழனிசாமி அணிக்கே ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வேன் என்று டிடிவி தினகரன் நேற்று அறிவித்தார்.

சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்த நிலையில், இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, தங்களது கருத்தைக் கேட்க வேண்டும் என்று கேவியட் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com