கந்துவட்டி வில்லனிடமிருந்து திரையுலகை மீட்க வேண்டும்: ஸ்டாலின், ராமதாஸ் வலியுறுத்தல்

கந்து வட்டி எனும் வில்லனிடமிருந்து திரையுலகை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கந்து வட்டி எனும் வில்லனிடமிருந்து திரையுலகை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: கந்து வட்டி கொடுமையால் திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் இந்த ஆட்சியில் அரங்கேறியுள்ளது. திருநெல்வேலியில் கந்து வட்டியால் நான்கு பேர் குடும்பத்துடன் தீ குளிக்கும் அளவுக்கு சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இவற்றைப் போக்குவதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
ராமதாஸ்: தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வில்லன் கந்து வட்டியும், கந்து வட்டிக்கு கடன் தருபவர்களும்தான் தயாரிப்பாளர் ஜி.வி., மற்றும் அசோக்குமார் தற்கொலைக்கு மூல காரணமாக இருந்தவர் அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி வில்லனிடமிருந்து திரையுலகை மீட்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com