நதிகள் இணைப்பு: மத்திய அமைச்சரிடம் ஆளுநர் வலியுறுத்தல்

நதிகளை இணைப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தினார்.
ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை தம்மை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், நதிகள் இணைப்பு தொடர்பான குறிப்புகளை அளிக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை , த்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள், நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை நேரில் சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பு குறித்து ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வெளியிட்ட செய்தி: தீபகற்ப நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னாறு, பாலாறு, காவிரி, வைகை ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும், குண்டாறு நதி இணைப்புத் திட்டம், பம்பா, அச்சன்கோவில் மேற்குப் பகுதியில் பாயும் உபரி நீரை வைப்பாற்றுக்கு திருப்பி விட வேண்டும் போன்ற தமிழக அரசின் கோரிக்கைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஆளுநர் வலியுறுத்தினார்.
இதேபோன்று, மாநில அரசின் மற்றொரு முக்கிய திட்டமான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்பதையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இந்தத் திட்டங்கள் தொடர்பான குறிப்புகளையும் மத்திய அமைச்சரிடம் ஆளுநர் புரோஹித் அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com