நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு விரைவில் செயல் வடிவம்: நிதின் கட்கரி

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு விரைவில் செயல் வடிவம் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு விரைவில் செயல் வடிவம்: நிதின் கட்கரி

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு விரைவில் செயல் வடிவம் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: 
நாட்டின் ஒரு புறம் வெள்ளமும், மறுபுறம் வறட்சியும் ஏற்படுகிறது. வட மாநிலங்களில் 14 ஆறுகளும், தீபகற்ப இந்தியாவில் சுமார் 15 பெரிய நதிகளும் ஓடுகின்றன. 
இவற்றின் இணைப்பு குறித்து பல ஆண்டுகளாகவே பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கோதாவரி ஆற்றில் மட்டும் ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. தற்போது 300 டிஎம்சி தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் போலாவரம் வரை கொண்டு வரப்பட்டு அப்பகுதியே பசுமையாகக் காட்சியளிக்கிறது. 
இதேபோல் மேலும் 300 டிஎம்சி நீரை கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகளை இணைத்து சோமசீலா அணை வழியாக காவிரி வரை இணைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றார் கட்கரி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com