ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டி: டி.டி.வி.தினகரன்

ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் டி.டி.வி.தினகரன்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் டி.டி.வி.தினகரன்.

ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் அதிமுக அம்மா அணியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. இரட்டை இலை தொடர்பாக வரும் திங்கள்கிழமை (நவ.27) நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். முதல் சுற்றிலே அவர்கள் வெற்றி பெற்றது போலத் தெரியும். ஆனால், இறுதிச் சுற்றில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 
நவம்பர் 29-இல் சசிகலாவை சந்திக்க உள்ளேன். ஆர்.கே.நகரில் நான்தான் போட்டியிட வேண்டும் என்று அவர் ஏற்கெனவே தெரிவித்தார். அதன்படி, அத்தொகுதியில் நான் போட்டியிட உள்ளேன். 
கட்சியின் சின்னம் அவர்களிடம் இருக்கலாம். ஆயுதம் வீரர் கையில்தான் இருக்க வேண்டும்; கோழை கையில் இருக்கக் கூடாது. எனவே, தொப்பி சின்னத்துடன் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம். மக்கள் மன்றத் தீர்ப்பு எங்களுக்கு உதவியாக இருக்கும். 
இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றுவிட முடியாது. சசிகலாவின் படத்துடன்தான் ஆர்.கே.நகரில் கடந்த முறை பிரசாரத்தில் ஈடுபட்டோம். இந்த முறையும் அவரது படத்தை கண்டிப்பாகப் பயன்படுத்துவோம். 
ஆர்.கே.நகரில் கடந்த முறை பணப் பட்டுவாடா புகார் யாரால் எழுந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் துரோகத்தை மறக்க மாட்டார்கள். நாங்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்துவோம். அது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் இதுவரை வரவில்லை. மக்கள் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் எண்ணத்தில் உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com