கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு! 

அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு! 

சென்னை: அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  

சென்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்கிற பாலா. வார இதழ் ஒன்றில் கேலிச்சித்திரக்காரராக பணியாற்றி வருகிறார்.

கந்துவட்டி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தினர் அக்டோபர் 23 -ஆம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்து அக்டோபர் 24 -ஆம் தேதி பாலா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தக் கேலிச்சித்திரம் தொடர்பாக, அக்டோபர் 31 -ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 -இன் படி வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நவம்பர் 5 -ஆம் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர், கார்ட்டூனிஸ்ட் பாலவைக் கைது செய்தார். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இம்மாதம் 7-ஆம் தேதி பாலாவின் கைதைக் கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்பொழுது பாலாவின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராக பயன்படுத்தி இருந்தார்கள்.  

தற்பொழுது அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராக பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் பாரதி தம்பி, அஸதுல்லா உள்ளிட்ட சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது  காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com