சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகள் நியமனம்!

மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆறு பேரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை: மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆறு பேரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு என 75 நீதிபதிகளை நியமிக்க அங்கீகாரம் உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 54 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆறு பேரை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமனம் செய்து தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீதிபதிகளின் பெயர் விபரம் வருமாறு:

ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவேணி, பொங்கியப்பன் மற்றும் ஹேமலதா. இவர்களுடன் சேர்த்து தற்பொழுது நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஆக உயர்கிறது.

தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி விரைவில் பதவிப் பிராமாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com