பொது அறிவை வளர்க்க நாளிதழ்களைப் படிக்க வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

மாணவர்கள் அன்றாட நாட்டு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்க்கவும் நாள்தோறும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவுறுத்தினார். 
விழாவில் மாணவிக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின். உடன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மக்களவை உறுப்பினர் கே.என்.ராமசந்திரன் உள்ளிட்டோர்.
விழாவில் மாணவிக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின். உடன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மக்களவை உறுப்பினர் கே.என்.ராமசந்திரன் உள்ளிட்டோர்.

மாணவர்கள் அன்றாட நாட்டு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்க்கவும் நாள்தோறும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவுறுத்தினார். 
தாம்பரம் கார்லே மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பெஞ்சமின், ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டு, 6 பள்ளிகளைச் சேர்ந்த 1894 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர். 
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் 5-இல் ஒரு பங்கு பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் தற்போது அரசுப் பள்ளிகளிலும் செய்து தரப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் மட்டும் போதுமானது. கல்வி பயில அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருகிறது. நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்வதற்கும், பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்கள் நாளிதழ்களைப் படிக்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவதற்கேற்ப மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அமைச்சராக நான் உயர்ந்ததற்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களே காரணம். எனவே, மாணவர்கள் உயர்ந்த குறிக்கோள்களை அடைய இலக்கு நிர்ணயித்து அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார் அமைச்சர் பெஞ்சமின்.
தொடர்ந்து, ஆட்சியர் பேசியது: விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவர்களின் அறிவுத்திறனை செறிவூட்டும் திட்டமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 147 பள்ளிகளில் 27,896 மடிக்கணினிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினி மூலம் உலக அறிவு நடைமுறை விஷயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். நேரத்தைச் சேமித்தும், குறிப்பெடுத்தும் மடிக்கணினி மூலம் படிக்க முடியும். 
இத்திட்டத்தை மாணவர்கள் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமசந்திரன், தாம்பரம் எம்எல்ஏ ஆர்.ராஜா , முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் தமிழரசி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com