தனியாருக்கு சாதகமாக மின் உற்பத்தி குறைப்பு: விசாரணைக்கு வலியுறுத்தல்: அன்புமணி 

தனியாருக்குச் சாதகமாக, மின்வாரியத்தின் மின் உற்பத்தியைக் குறைத்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தனியாருக்கு சாதகமாக மின் உற்பத்தி குறைப்பு: விசாரணைக்கு வலியுறுத்தல்: அன்புமணி 

தனியாருக்குச் சாதகமாக, மின்வாரியத்தின் மின் உற்பத்தியைக் குறைத்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்ச மின்சாரத் தேவை 11,367 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. இதை தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்கள், நெய்வேலி மற்றும் கூடங்குளம் மின் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியும். ஆனால், அதைச் செய்வதற்கு பதிலாக நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடமிருந்து 3,189 மெகாவாட் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து அரசு வாங்குகிறது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.3.42 மட்டுமே. 
இதன் உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடமிருந்து ரூ.4.91 முதல் ரூ.6.00 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால், ஒப்பந்த காலத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.5,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com