தமிழக அரசுத் துறைகளுக்கு எதிராக 19 ஆயிரம் வழக்குகள் நிலுவை: புள்ளி விவரம் அளிக்கும் பகீர் தகவல்

தமிழக அரசுத் துறைகளுக்கு எதிராக 19 ஆயிரம் வழக்குகள் நிலுவை: புள்ளி விவரம் அளிக்கும் பகீர் தகவல்

தமிழக அரசுத் துறை அல்லது அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 19 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழக அரசுத் துறை அல்லது அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 19 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2010ம் ஆண்டு முதல் பிப்ரவரி 2014ம் ஆண்டு வரை சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செய்யப்படும் இந்த கண்காணிப்பு அமைப்பு  உருவாக்கப்பட்டது.

இதில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு எதிராக அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக 2,957 வழக்குகள் உள்ளன. இதில் 1,590 வழக்குகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. போக்குவரத்துத் துறைக்கு எதிராக 2,292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,146 வழக்குகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.

ஊரக வளர்ச்சித் துறைக்கு எதிராக மிகவும் குறைவாக அதாவது 751 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில் வெளியான ஆய்வில், மேலும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சிஎம்டிஏவுக்கு எதிராக 2000ஆவது ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் சேவை குறைபாடு, சட்ட அங்கீகாரமற்ற கட்டடம், நில அபகரிப்பு உட்பட சுமார் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com