வி.கே. சசிகலா சிறையில் இருந்து இன்று பரோலில் வெளியே வர வாய்ப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வி.கே. சசிகலா சிறையில் இருந்து இன்று பரோலில் வெளியே வர வாய்ப்பு

பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் இருந்து வெளியே வரும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவை வரவேற்க, அவரது உறவினரும், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலருமான டிடிவி தினகரன் நேற்று இரவு பெங்களூரு சென்றுள்ளார்.

சிறையில் இருந்து வெயியே வரும் சசிகலாவைக் காண அவரது தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறை வாயிலில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று நிகழாண்டு பிப்.15-ஆம் தேதி முதல் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சிறையில் இருந்து செல்ல 15 நாள்கள் பரோல் வழங்குமாறு சிறைக் கண்காணிப்பாளர் எம்.சோமசேகரிடம் அக்.2-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். 

அதை பரிசீலித்த சிறையின் சட்டப் பிரிவு அதிகாரிகள் அந்த மனுவில், நடராஜனின் உடல்நிலை குறித்து அரசு மருத்துவரின் அதிகாரப்பூர்வச் சான்று உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படவில்லை என்பதால், புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு அவரது வழக்குரைஞரை சிறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். 

இதைத் தொடர்ந்து, சசிகலா தனது வழக்குரைஞர் அசோகன் மூலமாக சிறைக் கண்காணிப்பாளர் எம்.சோமசேகரிடம் உரிய சான்றுகள், பிரமாணப் பத்திரங்களுடன் புதிய மனுவை அக்.4-ஆம் தேதி தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்துவரும் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் எம்.சோமசேகர், தமிழக காவல்துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com