அதிமுக சின்னம் தொடர்பான விவகாரத்துக்கு நவம்பர் 10-க்குள் தீர்வு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

அதிமுகவின் இரட்டை இலை  சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்துக்கு வரும் நவம்பர் 10-க்குள் தீர்வு காண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக சின்னம் தொடர்பான விவகாரத்துக்கு நவம்பர் 10-க்குள் தீர்வு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

புதுதில்லி:  அதிமுகவின் இரட்டை இலை  சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்துக்கு வரும் நவம்பர் 10-க்குள் தீர்வு காண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகததில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கொன்றில் அதிமுகவின் இரட்டை இலை  சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்துக்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தீர்வு காண வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்துஅதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். அதில் எதிர் அணியினர் தாக்குதல் செய்துள்ள ஆவணங்கள் 10000 பக்கங்களுக்கு மேலுள்ளது. எனவே  இது தெடர்பாக குறைந்த பட்சம் 4 மாதங்களாவது அவகாசம் கோரினார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  அசோக் தேசாய் இந்த வழக்கில்  தினகரனுக்கு மதுரை நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்காததை சுட்டிக் காட்டினார்.  

எதிர் அணியினர்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, தினகரன் வசம் குறைவான எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் இருப்பதால், நேரம் கடத்துவதற்காகவே அவகாசம் கேட்பதாக குற்றம் சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கினை தள்ளுபடி செய்தனர். தேர்தல் ஆணையத்தின் இன்றைய விசாரணையினை நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், அதிமுகவின் இரட்டை இலை  சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்துக்கு வரும் நவம்பர் 10-க்குள் தீர்வு காண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com