ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லி மாநில பாஜக செய்தித்தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல்களில் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33 (7)-ஆவது பிரிவை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற நேரிடும் பட்சத்தில், ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து தாமாக முன்வந்து அவர் விலக வேண்டியது கட்டாயம்.
இதனால், அந்த வேட்பாளரை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதுடன், அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் மீண்டும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் எழுகிறது. இதன்மூலம், அரசுக் கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுகிறது.
தேர்தல்களில் 2 தொகுதிகளில் ஒரே வேட்பாளர் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 2004-ஆம் ஆண்டில் பிரதமரிடம் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு வேறொரு யோசனையும் தேர்தல் ஆணையம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. 
அதாவது, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஒரு தொகுதியிலிருந்து உறுப்பினர் பொறுப்பை ராஜிநாமா செய்யும் அந்த வேட்பாளர், சம்பந்தப்பட்ட அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை ஏற்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இதுவரை இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com