காங்கிரஸ் தலைவர் தேர்தல்: இன்று பொதுக் குழு கூடுகிறது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.6) கூட உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.6) கூட உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. 
மாநிலத் தலைவரைத் தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தேர்தல் அதிகாரிகள் பாபிராஜ், சஞ்சய் தத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தலைவர்கள் பதவிக்கு யாராவது போட்டியிட்டால், தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லாவிட்டால் சு.திருநாவுக்கரசரே மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com