தமிழக-ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை: பாலாற்றில் வெள்ளம்

தமிழக-ஆந்திர மாநிலப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தமிழக-ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை: பாலாற்றில் வெள்ளம்

தமிழக-ஆந்திர மாநிலப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தமிழக-ஆந்திர எல்லையான வாணியம்பாடியை அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 அடி உயர தடுப்பணை கட்டியுள்ளது. 
இந்நிலையில், கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கன மழையால் வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர், கர்னூல், குப்பம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான காட்டாறுகள், சிறு ஓடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 
இதனால் தமிழக-ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள விஜிலாபுரம், பெரும்பள்ளம், ராமகுப்பம், வெலதிகாமணிபெண்டா, வீரணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.
மேலும், பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ராஜபுரம், பொகுள்ரே ஆகிய பகுதிகள் வழியாக புதன்கிழமை நள்ளிரவு புல்லூர் தடுப்பணைக்கு நீர் வந்து, தமிழக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 
இதன் காரணமாக, அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, பெரியபேட்டை வழியாக வாணியம்பாடி நகரம், மேட்டுபாளையம், உதயேந்திரம் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ளப் பெருக்கு காரணமாக பாலாற்றில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர். இதுபோல, ஆந்திர அரசு சார்பிலும் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
வாணியம்பாடி பகுதியில் பாலாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com