தமிழகத்தில் ஆயுர்வேத முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்க நடவடிக்கை: இல.கணேசன்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்த
தமிழகத்தில் ஆயுர்வேத முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்க நடவடிக்கை: இல.கணேசன்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் கூறினார்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் ஆயுர்வேத கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஆயுர்வேத தினம் விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய முறை மருத்துவத்துக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அதனை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5 மடங்கு அதிக நிதியை ஒதுக்கி, நாடெங்கும் ஆயுஷ் மருத்துவமனைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 
ஆயுர்வேத மருத்துவத்தை உலகம் ஏற்றுக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு இணையான மருத்துவ அறிவாற்றலை இங்குள்ள மருத்துவர்களும் பெற வேண்டும். இதுதொடர்பாக ஆரோக்கியமான போட்டி உருவாக வேண்டும். தமிழகத்தில் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளஆயுர்வேத மருத்துவ முதுநிலைப் படிப்பின் அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். வாய்ப்பு கிடைத்தால் மாநிலங்களவையிலும் இதுகுறித்து பேச உள்ளேன் என்றார் அவர். 
விழாவில், தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் தாயார் டாக்டர் ஹரிணி உன்னிக்கிருஷ்ணனுக்கு மருத்துவச் சாதனையாளர் விருது வழங்கினார். 
விழாவில், சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சேரமன்னன், மத்திய இந்திய மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர் வனிதா ஆர்.முரளிக்குமார், பாடகர் உன்னிகிருஷ்ணன், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து, சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் சி.ஹெச்.ராமகிருஷ்ணமாச்சார்யா, நடேசன் பள்ளி தாளாளர் ராமசுப்ரமணியன்,பொற்றாமரை சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com