மாணவர்கள் 5 மரங்கள் நட்டால் 5 மதிப்பெண்

தமிழகப் பள்ளிகளில் 5 மரங்கள் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மாணவர்கள் 5 மரங்கள் நட்டால் 5 மதிப்பெண்

தமிழகப் பள்ளிகளில் 5 மரங்கள் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர்களுக்கு எதிர்காலப் பள்ளிகள் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), ராஜலட்சுமி கல்விக் குழுமம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:
தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை புதிய பாடத்திட்டத்தில் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத் திட்டம் பொதுமக்களின் பார்வைக்கு 15 நாள்களில் வைக்கப்படும். அதைப் பார்வையிடுவோர் அதில் உள்ள குறைகளையும் புதிதாகச் சேர்க்க வேண்டிய அம்சங்களையும் தெரிவிக்கலாம். 
நீட் தேர்வுக்கு 500 பயிற்சி மையங்கள்: நீட்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 500 பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள்பயிற்சிகளை வழங்குவர். தமிழகத்திலும் இது தொடர்பாக 1,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும். 
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கணினிக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அதற்கான டெண்டர் விடப்படும். 
நூலகத் துறைக்கு விரைவில் புதிய இயக்குநர்: 5 மரக்கன்றுகள் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். நூலகத் துறைக்கு புதிய இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். 
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன், பள்ளி முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், இன்றைய கல்வி முறை குறித்து செயின்ட் ஜான் பப்ளிக் பள்ளித் தாளாளர் ஆர்.கிஷோர்குமார் ஆகியோர் பேசினர். 
சிஐஐ துணைத் தலைவர் எம்.பொன்னுசாமி, சென்னை ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் தங்கம் மேகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com